சென்னை:கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சட்டப்பேரவை சபாநாயகரும், ராதாபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு, 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேர் திமுகவில் சேர தயாராக இருப்பதாக கூறினார்.
மேலும், அதிமுகவின் முக்கியத் தலைவர் ஒருவர் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், இதுக்குறித்த செய்தியை திமுக கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் கூறினார். இதனையடுத்து அ.தி.மு.க.வை களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இவ்வாறு சபாநாயகர் பேசியுள்ளார் என அக்கட்சியின் வழக்கறிஞர்பாபு முருகவேல், சபாநாயகர் மீது மானநஷ்ட வழக்கு தொடுத்தார்.
இதில் சபாநாயகருக்கு எதிராக அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்களை சிறப்பு நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும் என வழக்கு திருப்பி அனுப்பப்பட்டது.