சென்னை:கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம், தற்போது 'ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தை இயக்கியுள்ளார். நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்து வருகிறது.
ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மற்றுமொரு அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது. ருமேனியா நாட்டிலுள்ள க்ளூஜ் நெபோகா நகரத்தில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் தேர்வாகி உள்ளது.