தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“கிளி ஜோசியம் இல்ல, இனி எலி ஜோசியம்!” கோயிலில் எலியை வைத்து ஜோதிடம்! - RAT JOTHIDAM

தமிழ்நாட்டில் கிளியை வைத்து ஜோதிடம் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜோதிடர்கள் கினி என்னும் எலியை வைத்து ஜோதிடம் பார்க்கும் முறையை கையாண்டு வருகின்றனர்.

கினி எலி ஜோதிடம்
கினி எலி ஜோதிடம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2025, 12:44 PM IST

திண்டுக்கல்:தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் கிளி ஜோதிடம் பார்ப்பது என்பது அதிகளவில் இருந்து வந்தது. பெரும்பாலும் கோயில்களுக்கு வெளியே வைக்கப்படும் இந்த கிளி ஜோதிடங்களை மக்கள் நம்பிக்கையுடன் சென்று ஜோதிடம் பார்த்து வந்தனர். இந்நிலையில் இந்த கிளி ஜோதிடத்திற்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஜோதிடர்கள் தற்போது தங்கள் ஜோதிட முறையில் மாற்றம் செய்து கிளிக்கு பதிலாக எலி வைத்து ஜோதிடம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

முதலில் கிளிகளுக்கு பயிற்சி அளித்து ஜோதிடம் செய்தது போல், தற்போது ஜோதிடர்கள் கினி என்னும் வகையான எலிக்கு தங்களுக்கு விருப்பபட்ட பெயரை வைத்து, பயிற்சி அளித்து ஜோதிடம் பார்க்க வைக்கின்றனர். எனவே தற்போது கிளி ஜோதிடத்திற்கு பதிலாக கினி ஜோதிடம் என்ற பெயரில் ஜோதிடம் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த ஜோதிட முறையானது கிளி ஜோதிடம் அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கினி எலி ஜோதிடம் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:70 ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு.. ஆர்.கே நகர் தொகுதியில் புதிய மத்திய கூட்டுறவு வங்கி திறப்பு!

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது வளர்ப்பு கினி எலியினை வைத்து இன்று ஜோதிடம் பார்த்தார். இவ்வாறு, கிளிக்கு பதில் கினி எலியை வைத்து ஜோதிடர் ஜோதிடம் பார்க்கும் முறை கோயிலுக்கு வந்த பக்தர்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details