தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டிங் மிஷினில் மறைத்து ஒரு கிலோ தங்கம் கடத்தல்! - Gold Seize in Trichy Airport

Gold Seize in Trichy Airport: சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கட்டிங் மிஷினில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1.19 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ 666 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்தி வரப்பட்ட தங்கம்
கடத்தி வரப்பட்ட தங்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 4:00 PM IST

திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா, வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

கடத்தி வரப்பட்ட தங்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ பயணிகள் விமானத்தில் பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்பொழுது, பயணி ஒருவர் கட்டிங் இயந்திரத்தில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ 666 கிராம் எடையுள்ள தங்கத்தின் மதிப்பு ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் என தெரிய வந்துள்ளது. அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு என இ-மெயில் மூலம் மிரட்டல்! - Chennai Airport Bomb Threat Mail

ABOUT THE AUTHOR

...view details