தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சியில் நடைபெற்ற கோயில் புனரமைப்பு பணிகள் - வெள்ளை அறிக்கை கேட்கும் ஹெச்.ராஜா! - Tamil Nadu temples - TAMIL NADU TEMPLES

திமுக அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத் துறை மூலம் புனரமைப்பு செய்யப்பட்ட கோயில்களை கள ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

ஹெச்.ராஜா மற்றும்  பாஜக நிர்வாகிகள்
ஹெச்.ராஜா மற்றும் பாஜக நிர்வாகிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2024, 7:48 PM IST

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, கூறுகையில்,"தமிழகத்தில் குறிப்பாக பெண் வாக்காளர்களை திசை திருப்பும் விதமாக மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. இது மது ஒழிப்பு மாநாடா ? அல்லது மது ஊக்குவிப்பு மாநாடா ? என்பது தெரியவில்லை. தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு மது ஊக்குவிக்கும் அரசு, ஏனென்றால் 500 மதுபான கடைகளை மூடுவேன் என்று சொல்லிவிட்டு ஆயிரம் தனியார் கிளப்புக்கு கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

ஹெச்.ராஜா பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

அந்த கிளப்பில் 150 உறுப்பினர்கள் தான் இருக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் இங்கு விதிகள் ஏதும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்த மது ஒழிப்பு மாநாட்டில் அரசாங்கம் அதன் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். அப்படி என்றால் இது மது உற்பத்தியாளர்கள் மது பிரியர்கள் மாநாடு என்றார்.

மேலும் மது என்பது மாநில அரசு கொள்கையில் மட்டும்தான் உள்ளது.இந்த ஆண்டு 1,700 கோடி ரூபாய் மதுக்கடை மூலம் வருமானம் வந்துள்ளது என்று திமுக கூறியிருப்பது வெட்ட கேடான விஷயம். மதுக்கடைகளைத் திறந்தவர்களே தான் மதுக்கடைகளை மூட வேண்டும் என தெரிவித்த அவர், மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு என குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க:"சிறுத்தை போல ஆரம்பித்து சிறுத்துப் போய்விட்டது, மது ஒழிப்பு மாநாட்டுக்கு விசிகவினர் ஆதரவே இல்லை".. தமிழிசை சௌந்தரராஜன்!

கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம். தொடர்ந்து அந்த விதிமுறைகளை பின்பற்றலாம் என கூறியிருந்தும் இந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை. இதன் மூலம் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுதான் திராவிட மாடல். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் தமிழக அரசு குட்டி உள்ளது .மேலும் நல்ல தீர்ப்பை இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கி உள்ளது. கோயில் புனர்நிர்மாணம் செய்வது கட்டுமானங்கள் தரமற்ற முறையில் உள்ளது. அதனால்தான் பழனிய கோபுரத்தில் மேற்பகுதி சிதிலமடைந்துள்ளதுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "திமுக அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத்துறை மூலம் புனரமைப்பு செய்யப்பட்ட கோயில்களை கள ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோயில் உணர அமைப்பு பணிகளில் பெரும்பாலும் தமிழகத்தில் ஊழல் நடந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என்று ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

அவர் கூறியிருந்தது போலவே செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார். அதிலிருந்ததாவது புரிந்துகொண்டு தமிழக முதலமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்திருக்கக் கூடாது. கல்லூரிகளில் போலியான ஆதார் கார்டுகளை கொடுத்து ஒரே பேராசிரியர் பல்வேறு கல்லூரிகளில் முறைகேடாக பணியாற்றியது தெரியவந்துள்ளது.

தற்போது பொன்முடி அந்தத் துறையின் அமைச்சராக இல்லாத சூழலில், முதல்வர் முறையாக விசாரணை செய்து அது என்ன முறையீடு நடந்தது என்று குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 15 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சியைக் கொண்டு சென்ற பாதையில் தற்போது அதிமுக அக்கட்சி செல்கிறதா என்று அதிமுக தொண்டர்கள் நினைத்திருக்கலாம். அதனால் வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம்,அந்த விவாதத்திற்குள் நாங்கள் செல்லவில்லை" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details