தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“மின் கட்டண உயர்வை திரும்பப் பெற காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது” - செல்வப்பெருந்தகை! - Selvaperunthagai - SELVAPERUNTHAGAI

Selvaperunthagai: மக்கள் தீர்ப்புக்கு பிறகும் வெறுப்பு அரசியல் செய்யும் பாஜக இன்னும் திருந்தவில்லை என விமர்சித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு மின் கட்டண உயர்வை திரும்ப்ப பெற காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார்.

பேட்டியளித்த செல்வப்பெருந்தகை
பேட்டியளித்த செல்வப்பெருந்தகை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 2:55 PM IST

கரூர்: கரூர் - கோயம்புத்தூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செல்வப்பெருந்தகை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆர்எஸ்எஸ் ஆட்சி:கூட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, “எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஆர்எஸ்எஸ் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. இதனால் அறிவிக்கப்படாத அவசர கால சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாஜகவினரால் பதிலளிக்க முடியவில்லை:பத்திரிகையாளர்கள் மீது வழக்கு, யார் எதிர் கருத்து கூறினாலும் அவர்கள் மீது தாக்குதல் இப்படிப்பட்ட பாசிச ஆட்சி தான் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்பொழுது முழுமையான மோடி ஆட்சி என்றது போய், கூட்டணி ஆட்சி தான் நடத்த வேண்டும் என மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் தீர்ப்பளித்துள்ளார்கள். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள்.

அண்ணாமலை வெறுப்பு அரசியல் செய்கிறார்:அவர் மக்களின் குரலாக மக்களின் முகமாக இந்த தேசத்தில் விளங்கிக் கொண்டிருக்கிறார். இன்று கூட ஒரு அமைச்சர் தேசத்தில் யார் வாழ வேண்டும்?, யார் வாழக்கூடாது என்பதை பற்றி எல்லாம் செய்திகளை வெளியிடுகிறார். ஒரு வெறுப்பு அரசியலை தொடர்ந்து பாஜக அரசு செய்து வருகிறது. இன்னும் திருந்தியது போல தெரியவில்லை. இந்தியா முழுவதும் அப்படி என்றால் தமிழகத்தில் அண்ணாமலை எல்லோரையும் வெறுப்பு பார்வையோடு, வெறுப்பு அரசியல் செய்து கொண்டு வருகிறார்.

அது நீதிபதியாக இருந்தாலும் சரி, மாணவர்களாக இருந்தாலும் சரி, இறந்து போன தலைவராக இருந்தாலும் சரி, எல்லோரையும் காழ்ப்புணர்ச்சியோடு பேசி வருகிறார். இவையெல்லாம் இந்த தமிழக மக்கள் பார்த்து வருகிறார்கள். படிப்படியாக மீண்டும் அவர்களுக்கு மிகப்பெரிய படிப்பினை அளிப்பார்கள். 400 இடங்களுக்கு மேல் இந்தியாவில் வெற்றி பெறுவோம் என பாஜக கூறி தேர்தலைச் சந்தித்த நிலையில், மக்கள் எவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளனர் என்பதை பார்க்க வேண்டும்.

ஆளும் கட்சி வருத்தத்தில் உள்ளது: மத்திய பாஜக அரசு, வலது பக்கம் சந்திரபாபு நாயுடு, இடது பக்கம் நிதிஷ்குமார் ஆகியோர் தயவுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியை பொருத்தமட்டில், மகிழ்ச்சியாக தேர்தலைச் சந்தித்து மக்கள் பணியை ஆற்றி வருகிறது. ஆனால், ஆளும் கட்சி வருத்தத்தில் ஆட்சி அமைத்து உள்ளனர்” என்று கூறினார்.

தமிழக போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகர்: சாலைகளில் ஆடுகளை பலியிடுவது குறித்து நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து பேசிய அவர், “தமிழ் கலாச்சாரப்படி கோயில்களில் ஆடு பலியிடுவது என்பது இறைவனுக்கு வேண்டுதல் நிறைவேற்றும் பழக்கமாக உள்ளது. தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோயில்களில் ஆடு பலியிடுவதை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வந்தார். பின்னர் தமிழ் மக்களின் எதிர்ப்பால், அச்சட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டார். நீதிமன்றம் வழங்க உள்ள தீர்ப்பு குறித்து பின்னர் கருத்து தெரிவிப்பேன்” என்று கூறினார்.

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவ பின்னணியில் அரசியல் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருப்பது குறித்த ஈடிவி பாரத் செய்தியாளரின் கேள்விக்கு, “ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான தமிழக போலீஸ் விசாரணையில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை உள்ளது. விசாரணை 10 நாட்கள் நிறைவுற்றுள்ள நிலையில் கருத்து கூற முடியவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சியின் விருப்பம் உண்மையை, உண்மையான குற்றவாளியை காவல்துறை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான். உதய் மின் கட்டண திட்டத்திற்கு கையொப்பமிட்டது தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம். மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பதை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:“சவால் விட்டு சொல்கிறேன்.. நீட்டை கொண்டு வந்தது இவர்கள் தான்..” - செல்வப்பெருந்தகை ஆவேசம்! - SELVAPERUNTHAGAI

ABOUT THE AUTHOR

...view details