மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம காங்கிரஸ் கமிட்டி முதல் கட்சி கூட்டமைப்பை பலப்படுத்தி மறுசீரமைப்பது குறித்து மாநில, மாவட்ட, வட்டார மற்றும் நகர நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர். சுதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட மேலிட பார்வையாளர்களாக மாநில பொதுக்குழு உறுப்பினர் குலாம் நபி, மாநில பொதுச்செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்று, கிராம கமிட்டி மறுசீரமைப்பு மற்றும் பூத் கமிட்டி நியமனம் செய்வதற்கான படிவங்களை வழங்கினர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய குலாம் நபி (Credits- ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:கட்சிகளை உடைத்து.. புதிய கூட்டணிகளை உருவாக்கி... மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி குறித்து திமுக கருத்து!
இதன் தொடர்ச்சியாக கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் குலாம் நபி, "2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுகவினர் எல்லா பகுதிகளிலும் முகவர்கள், பொறுப்பாளர்களை நியமித்து கட்சியை பலமாக வைத்து நம்மை பலவீனப்படுத்துகிறார்கள். நமது கட்சியை வார்டுவாரியாக பொறுப்பாளர்கள் நியமித்து பலப்படுத்துங்கள்.
மேலும், கூட்டுறவு தேர்தல் பதவிக்கு போட்டியிடுவதற்கு தலைவர், இயக்குநரை உருவாக்குங்கள். அப்படி செய்தால்தான் காங்கிரஸ் கட்சி பலமானதாக விளங்கும். விழுப்புரத்தில் பொன்முடியை அலறவிட்டவன் நான். விழுப்புரம் நகரத்தில் உள்ள 42 வார்டுகளில் போராடி 3 கவுன்சிலர்கள் வைத்துள்ளேன். விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமாக 13 கவுன்சிலர்கள் வைத்துள்ளேன். இதுபோல் காங்கிரஸ் கட்சியை கிராமம், நகரம் மற்றும் ஒன்றியம் வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து வலுவடைய செய்யுங்கள்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்