சென்னை:பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் டீக்கடக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியில் மாநில தலைவர் ராஜாஜியை கொடுரமாக கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை நடந்த கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், ராஜாஜியை கொடூரமாக கொலை செய்தது, காட்டுப்பாக்கம் பகுதியைச் கிருஷ்ணகுமார் என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்து வந்த கிருஷ்ண குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் கோபால் மற்றும் சம்பத், சந்தோஷ், ராஜேஷ் உள்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறுகையில், "காங்கிரஸ் பிரமுகரான கோபாலின் மனைவி கவுரி. இவர் கடந்த சில ஆண்டுகளாக கோபாலை பிரிந்து ராஜாஜியுடன் வாழந்து வந்துள்ளார். அவர் கவுரியை தனது மனைவி என சமூக வலைத்தளப் பக்கங்களில் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் பதிவிட்டு வந்துள்ளார்.