தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான் முதல்வன்: 'புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தையே தொடங்கும் நம்பிக்கை வந்துவிட்டது' - மாணவிகள் மகிழ்ச்சி - NAAN MUDHALVAN SCHEME

எதிர்காலத்தில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தையே தொடங்கும் அளவிற்கு நம்பிக்கையை தருவதாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டில் சர்வதேச இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய மாணவிகள் தெரிவித்தனர்.

மாணவிகள் பேட்டி
மாணவிகள் பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2024, 4:11 PM IST

சென்னை: 2022 ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதியன்று தமிழ்நாடு முதல்வரால் நான் முதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, பல்வேறு துறைகளில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இத்திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

நான் முதல்வன் திட்டத்தின் ஒரு அங்கமாக ஸ்கவுட் திட்டத்தின் மூலம், கடந்த ஆண்டு 25 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டு பயன் பெற்றனர்.

அதனை தொடர்ந்து இந்த ஆண்டு 6 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் உள்ள 2 பல்கலைக்கழகங்களுக்கு சர்வதேச இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, டிசம்பர் 7ஆம் தேதி ஜப்பான் நாட்டிற்கு சென்று டோக்கியோ நியூஜெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற ஏழு மாணவிகள் பயிற்சி முடிவற்ற நிலையில், இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வாகி ஜப்பான் சென்று திரும்பிய ஏழு கல்லூரி மாணவிகளுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:மதுரையில் மெட்ரோ ரயில்... ஒத்தக்கடை தொடங்கி திருமங்கலம் வரை.. 32 கி.மீ.க்கு திட்டம்.. விறுவிறுக்கும் ஆய்வு பணிகள்!

ஸ்டார்ட் அப் நிறுவனம்

பின்னர் இது குறித்து கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியைச் சேர்ந்த ஹெல்டிரின் லடோ ஜஸ்டின் சுந்தர் கூறுகையில், '' நான் முதல்வன் திட்டத்தின் பயிற்சியின் மூலம் பல்வேறு திறன்களை மேம்படுத்த உதவியதாகவும், எதிர்காலத்தில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தையே தொடங்கும் அளவிற்கு நம்பிக்கையை தருவதாகவும், இதனை ஏற்படுத்தித் தந்த தமிழ்நாடு அரசிற்கும், முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும், திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.

கல்லூரியில் படித்ததை விட இன்னும் உள்ளது

மேலும், ''ஒரு குழுவாக இருக்கும் போது அனைவரும் இணைந்து பணியாற்றினால் நாங்கள் கொண்டுவரும் உள்ளீடுகள் அனைத்தும் முக்கியமானதாக இருக்கும், எங்களுக்கு பயனுள்ளதாகவும் அமையும் என்பதை புரிந்து கொண்டோம். கல்லூரியில் படித்ததை விட இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள இருக்கிறது என புரிந்து கொண்டோம். இதுபோன்ற இன்டெர்ஷிப் மூலம் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்வதன் மூலம் நாம் என்ன ஆக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த முடியும்'' இவ்வாறு கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details