கோயம்புத்தூர்:வயநாடு நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 5வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாட்டியையும் பேத்தியையும் யானைகள் பாதுகாத்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளரான UMT ராஜா அந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில், பாட்டி மற்றும் சிறுமியை யானை பாதுகாப்பது போல களிமண்ணில் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த கோர சம்பவத்தால் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் உள்ளனர்.
சம்பவத்தன்று, நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் உயிரை காப்பற்றுவதற்காக தனது பேத்தியை தூக்கிக் கொண்டு வனப்பகுதிக்குள் ஓடியுள்ளார் மூதாட்டி சுஜாதா. அப்போது, அடர் வனப்பகுதிக்குள் 3 காட்டு யானைகள் இருந்துள்ளது. இந்நிலையில், நாங்களே பெரிய துயரத்திலிருந்து தப்பி வந்திருக்கிறோம், எங்களை ஒன்றும் செய்யாதே என்று யானையிடம் கூறியுள்ளார்.