தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெங்களூரு கட்டிட விபத்து: உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி அறிவிப்பு!

கனமழை காராணமாக கர்நாடக மாநிலம் பெங்களூரு பாபுசாபாலி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இரண்டு தமிழர்களுக்கு நிவாரண நிதி வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின், இடிந்து விழுந்த கட்டிடம்
முதலமைச்சர் ஸ்டாலின், இடிந்து விழுந்த கட்டிடம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 7:47 PM IST

பெங்களூரு:கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் யெலகங்கா, மல்லேஸ்வர், சில்க் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

கனமழையில் இடிந்த கட்டடம்:இந்நிலையில் கடந்த 22.10.2024 அன்று பெங்களூரு, ஹென்னூரில் பிற்பகலில் பெய்த கனமழையின் காரணமாக பாபுசாபாலி பகுதியில் கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த கட்டடம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்த விபத்துக்குள்ளானது. அந்த இடிபாடுகளில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான நிலையில் பத்து பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 7 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் தமிழ்நாட்டிலிருந்து கட்டுமானப் பணிக்காக சென்றிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

முதலமைச்சர் இரங்கல்:இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க கோரி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:விசாகப்பட்டினத்தில் 16ஆம் தேதி தொடங்கப்பட்ட அணு சக்தி திறன் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கேகிளிக்செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details