தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துரை தயாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! - MK Stalin inquired durai health - MK STALIN INQUIRED DURAI HEALTH

CM MK stalin inquired durai dayanidhi health: வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியைச் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

MK Stalin and Durai Dayanidhi Photos
MK Stalin and Durai Dayanidhi Photos (Credits to Durai Dayanidhi X Page - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 9:10 PM IST

வேலூர்:வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியைச் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். துரை தயாநிதி, கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உயர் ரக சிகிச்சை அளிக்கக்கூடிய வார்டில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். அந்த வார்டில் துரை தயாநிதிக்கு, அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரை தயாநிதிக்கென்று மருத்துவக் குழு ஒதுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், துரை தயாநிதியை மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். துரை தயாநிதிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். ஸ்டாலினின் மருமகன் சபரீசன், திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகையொட்டி, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஆகிய இடங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக, முதலமைச்சர் வருகையொட்டி வேலூர் சிஎம்சி மருத்துவமனை முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களை கொண்டு முழு சோதனை செய்தனர்.

இதையும் படிங்க:கோவை எம்.எல்.ஏ அலுவலத்தில் மது பாட்டில்களா? ஷாக் ஆன வானதி சீனிவாசன்! - Vanathi Srinivasan Alleges DMK

ABOUT THE AUTHOR

...view details