குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஒரு தரப்பினர் வரவேற்பு பேனர் வைத்துள்ளனர். அதனை மற்றொரு பிரிவினர் கிழித்தது தொடர்பாக, இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில், இரு தரப்பினரும் மாறி மாறி கட்டை, கற்களால் தாக்கிக்கொண்டதில் 13 பேர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக குளித்தலை காவல் நிலையத்தில் பொய்யாமணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (27), கணேசன் (27) , பிரசன்னா ( 22), கதிரவன் (18), ராஜலிங்கம் (25), அரவிந்த் (25), யுவராஜ் (22) , பரத் (28), நவநீதன் (52) ஆகிய 9 பேரை குளித்தலை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதேபோல் பொய்யாமணி கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜா (53) என்பவர் அளித்த புகாரில், கடந்த 14ஆம் தேதி நடந்த இருவேறு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கடையில் இருந்த ராஜாவிடம் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தோர் ஒன்று கூடி ராஜாவை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர்.
மேலும், ராஜாவை மிரட்டி 'உனது மகன் யுவராஜ் எங்கடா' என கேட்டு கையால் அடித்து, கற்களை கொண்டு கடை முன்புறம் மற்றும் வீடு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடிவிட்டனர். இந்த புகாரின் பேரில்,