உதகைமண்டலம்: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, நீலகிரி மாவட்ட கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் மனு அளித்தனர். சபையை நடத்த விடாமல் சில இந்துத்துவா அமைப்பினர் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும், அதனால் கிறிஸ்தவர்கள் மன உளைச்சலில் இருப்பதாகவும் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அந்த மனுவில், ''சிறுபான்மை மக்களாகிய கிறிஸ்தவர்கள் எல்லா மதத்தினரோடும் சகோதர உணர்வோடும், சமூக நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், கடந்த சில காலங்களாக சில மதவாத அமைப்புகள் ஒன்றிணைந்து சிறுபான்மை கிறிஸ்துவ மக்களை தங்களுடைய வழிபாட்டு தளங்களை நடத்த விடாத படி இடையூறு செய்து வருகின்றனர். கிராமப் பகுதியில் உள்ள வீடுகளில் கிறிஸ்தவ வழிபாடுகள் நடத்த விடாமல் தடுப்பதாகவும், இதனால் கிறிஸ்துவ மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க:"ராமதாஸுக்கு வேற வேல இல்ல" - அதானி குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் ரியாக்ஷன்!
மேலும், இது குறித்து நீலகிரி மாவட்ட கிறிஸ்துவ கூட்டமைப்பு சார்பாக கோல்டன் கிராஸ் கூறுகையில், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் கடந்த சில நாட்களாக சிறுபான்மையான கிறிஸ்தவ மக்களுக்கு இந்துத்துவா அமைப்பின் மூலமாக மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர்.