சென்னை: மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று வியாழக்கிழமை (நவ.28) அவரை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 11 ஆம் தேதி கிண்டி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையான மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இதற்கிடையில், நேற்று அவரது (நவ.27) உடல்நிலை சற்று பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை ஈவிகேஎஸ் இளங்கோவனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து, உடல்நலம் குறித்தும், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார். அத்துடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:திரெளபதி முர்மு தமிழக பயணம்: உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை!