சென்னை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தனியார் அமைப்புடன் இணைந்து இந்தியாவின் முதல் ஆண் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா-4 கார் ரேஸ் பந்தயத்தை ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. சென்னை தீவு திடல் மைதானத்தைச் சுற்றி உள்ள சாலைகளில் நடத்தப்படும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் ஃபார்முலா-4 கார் ரேஸ் ஆனது இன்று முதல் ஒன்றாம் தேதி வரை மதியம் 12 பணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருப்பதால் அப்பகுதியில் சில போக்குவரத்து மாற்றங்களை போக்குவரத்து காவல்துறையினர் செய்துள்ளனர்.
அதன்படி, காமராஜர் சாலையில் தெற்கிலிருந்து ஒரு வாகனங்கள் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை அண்ணா சாலை பெரியார் சிலை சென்ட்ரல் லைட் பாயிண்ட்
ஈவிஆர் சாலை வழியாக இலக்கை சென்றடையலாம்.
அதேபோல் அண்ணா சாலையில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயிண்ட் நோக்கி திருப்பி விடப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிவானந்தா சாலை மற்றும் கொடிமரச் சாலை முற்றிலும் மூடப்படும், வடக்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம் பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒருவழி பாதையானது தற்காலிக இருவழிப் பாதியாக மாற்றப்பட்டுள்ளது.
முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணா சாலை மற்றும் கொடிமர சாலைகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை, அதற்கு பதிலாக பல்லவன் சாலை சென்ட்ரல் ரயில்வே நிலையம் பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம் எனவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளான வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை. ஈ.வி.ஆர்.சாலை, ஆர்.ஏ.மன்றம், முத்துசாமி பாயிண்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சீறிப்பாய காத்திருக்கும் அழகிய அசுரன்.. ஃபார்முலா 4 கார் பந்தயம் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை!