தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை - பெங்களூர், சென்னை - நாகர்கோவில் புதிய வந்தே பாரத் ரயில் சேவை! எப்போது? எங்கெங்கு நிற்கும்? முழு விவரம்! - New Vande Bharat Express for TN

2 New Tamil Nadu Vande Bharath Train: தமிழகத்தில் புதிய இரண்டு வந்தே பாரத் ரயில்களாக சென்னை - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் சேவையை நாளை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில் கோப்புப் படம்
பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 4:55 PM IST

மதுரை:சென்னையில் நாளை சென்னை - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூர் இடையே இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களை காணொலிக் காட்சி மூலம் நாளை பிரதமர் துவங்கி வைக்கிறார். சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் துவக்க நாளில், சென்னையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மேலும், இதன் துவக்க விழா சென்னையில் நடைபெறும் நிலையில், இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை மேயர் மற்றும் சென்னை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

அதேபோல, மதுரை - பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் துவக்க நாளில், மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு பெங்களூர் சென்று சேரும். மதுரையில் நடைபெறும் இதன் துவக்க விழாவில், மத்திய ரயில்வே துறை மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் வி.இந்திராணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (20627):இந்த ரயில்களின் வழக்கமான சேவை செப்டம்பர் 2 முதல் துவங்க இருக்கிறது. அதன்படி, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (20627), சென்னை எழும்பூரில் இருந்து புதன்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 01.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20628) நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் (20671):மதுரை - பெங்களூர் கன்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் (20671), செப்டம்பர் 2 முதல் மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 05.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்று சேரும். மறு மார்க்கத்தில், பெங்களூரு கண்டோன்மெண்ட் - மதுரை வந்தே பாரத் ரயில் (20672), பெங்களூரு கண்டோன்மெண்ட்டில் இருந்து மதியம் 01.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.45 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாளை நடைபெற உள்ள துவக்க நாளில், ரயில்கள் நிற்கும் ரயில் நிலையங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மக்கள் பிரதிநிதிகள், பயணியர் சங்கத்தினர், மாணவர்கள், முக்கிய பிரமுகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். முக்கிய பிரமுகர்கள், சில மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு இந்த துவக்க நாள் சிறப்பு ரயிலில் பயணம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:“தமிழகத்தின் விடியல் அமெரிக்கா சென்றுள்ளது.. ஆனால் அங்கும் விடியவில்லை”

ABOUT THE AUTHOR

...view details