தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கு; குற்றச்சாட்டு பதிவுக்காக விசாரணை ஒத்திவைப்பு! - I Periyasamy housing allotment case - I PERIYASAMY HOUSING ALLOTMENT CASE

I Periyasamy housing Plot allotment case: வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவுக்காக விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.பெரியசாமி, சென்னை உயர்நீதிமன்றம்
ஐ.பெரியசாமி, சென்னை உயர் நீதிமன்றம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 3:31 PM IST

சென்னை:கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கும் வகையில் அரசு விருப்புரிமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ், எந்த ஆவணங்களும் இல்லாமல் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வின், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் கடந்த 2008ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கியது.

இந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி சுயலாபம் அடைந்ததாகவும், அதற்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறி, ஜாபர் சேட், பர்வின், வீட்டுவசதி வாரியத்தின் அப்போதைய செயல் பொறியாளர் முருகையா, முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கம், அவரது மகன் துர்கா சங்கர், அப்போது வீட்டு வசதி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி (தற்போது அமைச்சர்) மற்றும் டி.உதயகுமார் ஆகிய 7 பேருக்கு எதிராக 2013ஆம் ஆண்டில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டி வழக்குப்பதிவு செய்தது. பின், கடந்த 2019ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்ப்பட்டது.

அந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.பெரியசாமி, பர்வீன், கே.ராஜமாணிக்கம், ஆர்.துர்காசங்கர் ஆகிய 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களது கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பர்வீன் உள்ளிட்டோர் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஐ.பெரியசாமி தவிர மற்ற அனைவருக்கும் எதிரான வழக்குகளை ரத்து செய்தும், மற்றவர்களை விடுவித்தும் உத்தரவிட்டது.
இந்நிலையில், எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு இன்று (ஆகஸ்ட் 27) விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகாமல், ஆஜராக விலக்கு கோரி மனுத் தாக்கல் செய்யபட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மற்றவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கை விரைந்து முடிக்க குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். பின்னர், குற்றச்சாட்டு பதிவு செய்ய விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு; நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க எடப்பாடி பழனிசாமி மனு! -

ABOUT THE AUTHOR

...view details