சென்னை:இன்று முதல் ஜூன் 6ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை: சேலம் மாவட்டம் ஏற்பகாடு பகுதிகளில் 4 செ.மீ மழையும், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், தருமபுரி மாவட்டம் பென்னாகரம், திருச்சி மாவட்டம் சிறுகமணி ஆகிய பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கோயம்புத்தூர் மாவட்டம் சோலையார், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, நீலகிரி மாவட்டம் பார்வூட், குந்தா பாலம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை :அதிகபட்ச வெப்பநிலையாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், தமிழ்நாட்டின் இதர பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 43.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ் மற்றும் தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வட தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 37 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ்.
தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 33 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23 டிகிரி முதல் 25 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 41.5 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 40. 2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (ஜூன் 1), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை (ஜூன் 2), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஜூன் 3ம் தேதி முதல் 4ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 5ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜூன் 6ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 7ம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:இன்று முதல் ஜூன் 5ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் (1-3 டிகிரி செல்சியஸ்) குறைந்து, இயல்பை ஒட்டியும் மற்றும் இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.