தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"விழுப்புரத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ மழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்" - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - FENJAL CYCLONE

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் இன்றுவரை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை தொடர்பான கோப்புப்படம்
மழை தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2024, 6:49 PM IST

சென்னை :வடதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ) : மைலம் AWS (விழுப்புரம்) 51 செ.மீ, புதுச்சேரி AWS (புதுச்சேரி) 49 செ.மீ, புதுச்சேரி (புதுச்சேரி) 48 செ.மீ, பத்துக்கண்ணு (புதுச்சேரி) 45 செ.மீ, திருக்கண்ணூர் (புதுச்சேரி) 43செ.மீ , புதுச்சேரி டவுன் (புதுச்சேரி) 40 செ.மீ, திண்டிவனம் (விழுப்புரம்) 37 செ.மீ, RSCL-2 நேமூர் (விழுப்புரம்) 35 செ.மீ, RSCL வல்லம் (விழுப்புரம்) 32 செ.மீ, RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்) 28 செ.மீ, செஞ்சி (விழுப்புரம்), RSCL-2 கெடார் (விழுப்புரம்) 25 செ.மீ, மரக்காணம் (விழுப்புரம்) 24 செ.மீ, திருவண்ணாமலை AWS (திருவண்ணாமலை), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 22 செ.மீ, ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), (காஞ்சிபுரம்) 21 செ.மீ, மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 20 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 6 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை :

டிச 2 : தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

டிச 3 : தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிச 4 - 7 : தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தரைக்காற்று எச்சரிக்கை :

டிச 1 : வட தமிழகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாமக்கல், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று மாலை வரை வீசக்கூடும். மேலும், அதற்கடுத்து காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை படிபடியாக குறையக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

தமிழக கடலோரப்பகுதிகள் :

டிச 1 :வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச 2 - 4 :தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள் :

டிச 1 : தென்கிழக்கு வங்கக்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச 2 : தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க :ஃபெஞ்சல் புயல்.. கனமழை... ஆய்வுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன?

1.12.2024 :

ரெட் அலர்ட் :கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 ஊர்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட் :செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட 12 ஊர்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட் :சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நாமக்கல் உள்ளிட்ட 11 ஊர்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

2.12.2004 :

ஆரஞ்ச் அலர்ட் :நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 5 ஊர்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட் :கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, தேனி ஆகிய ஊர்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details