சென்னை: சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. இதில் தக்காளி வெங்காயம் என்பது தமிழ்நாட்டின் மாவட்டங்களில் இருந்து 5 விழுக்காடு மட்டும் தான் வருகிறது, மீதம் 95 விழுக்காடு வெளி மாநிலங்களில் இருந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக வெளி மாநிலங்களின் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் சில நாட்களாக மிக அதிகமாக காணப்பட்ட தக்காளி வெங்காயம் விலை இந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்துள்ளது. தக்காளி 1 கிலோ 40 ரூபாய், வெங்காயம் 1 கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் காய்கறிகளை பொறுத்தவரை வடமாநிலங்களில் சற்று மழை பெய்ய தொடங்கியதால் காய்கறி வரத்து அதிகரிக்க தொடங்கிய நிலையில் விலையும் சற்று குறையத் தொடங்கியுள்ளது. காய்கறிகளின் விலை நிலவரம் மற்றும் வரத்து குறித்து, கோயம்பேடு காய்கனி மலர் வியாபார சங்க பொருளாளர் சுகுமாறன் கூறுகையில், “கடந்த 10 நாட்களாக தக்காளி, வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது, இதனால் தக்காளி விலை 1 கிலோ 40 ரூபாய்க்கும், வெங்காயம் 1 கிலோ 40 முதல் 30 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்துவரும் காய்கறி லாரியின் எண்ணிக்கை 600 முதல் 700 இருக்க வேண்டிய நிலையில் 510 முதல் 520 வாகனங்கள்தான் வருகின்றனர் இருந்தாலும் கடந்த மாதத்தைவிட வரத்து அதிகரித்துள்ளதால், விலை சற்று குறைய தொடங்கி உள்ளது.