சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதே பெயரில், திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் கிராமத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் கிராமத்திலும் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.
இதையடுத்து சென்னையிலிருந்து சட்டக்கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சென்னை நகருக்குள் அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது குறித்து விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று (ஏப்ரல் 12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக வருவாய்த் துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.