சென்னை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று துவங்குகிறது. இந்த போட்டி இன்று மாலை துவங்கி வருகிற 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டி தொடர் 7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் நடத்தப்பட உள்ளது.
போட்டி சிறப்பு:மேலும் அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் இடம் பெற்ற உள்ளனர். இந்த தொடரில் நடந்து முடிந்த ஒலிம்பியாட் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் இடம்பெற்ற வீரர், வீராங்கனைகளான அர்ஜுன் ஏரிகேசி, விதித் குஜராத்தி, ஹரிகா துரோனவல்லி, வைஷாலி மற்றும் அரவிந்த் சிதம்பரம் ஆகிய பல நட்சத்திரங்கள் பங்கேற்று விளையாட உள்ளனர்.