தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தைப்பூச திருவிழாவின் போது விபரீதம்! தேர் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பக்தர்கள்!

Chariot accident in Erode: ஈரோட்டில் பொன்மலை ஆண்டவர் கோயிலில் தைப்பூச விழாவின் போது சாலையோர பள்ளத்தில் தேர் கவிழ்ந்து விபத்தில் அதிர்ஷ்டவசமாக பொது மக்கள் உயிர் தப்பினர்.

ஈரோட்டில் தைப்பூச விழாவின் போது தேர் கவிழ்ந்து விபத்து
ஈரோட்டில் தைப்பூச விழாவின் போது தேர் கவிழ்ந்து விபத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 7:27 PM IST

ஈரோட்டில் தைப்பூச விழாவின் போது தேர் கவிழ்ந்து விபத்து

ஈரோடு:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொன்மலை ஆண்டவர் கோயிலில் தைப்பூச தேரோட்ட விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொன்மலை ஆண்டவர் கோயில் தைப்பூச தேரோட்ட விழா இன்று (ஜன. 25) நடைபெற்றது.

முருக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொண்டையம்பாளையம் கிராமத்தில் இரு தேர்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த நிலையில் தேர் சாலை வளைவில் திரும்பும் போது, ஒரு பக்கம் லேசான குழி இருந்ததால் தேரின் சக்கரங்கள் குழியில் இறங்கின.

இதையும் படிங்க:தைப்பூசத் திருவிழா.. பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சூடம் ஏந்தி சூரிய பகவான் தரிசனம்!

இதன் காரணமாக தேர் நிலை தடுமாறி சாலையில் சாய்ந்து கவிழ்ந்தது. அப்போது தேரின் அடியில் நின்றிருந்த பக்தர்கள் தேர் சாய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அங்கும் இங்கும் ஓடினர். தேரின் அடியில் பக்தர்கள் யாரும் இல்லாத நிலையில், அங்கு நின்றிருந்த இரு சக்கர வாகனம் மீது தேர் கவிழ்ந்ததால், இரு சக்கர வாகனம் சேதமடைந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொக்லைன் இயந்திரத்தின் மூலம் தேரை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா; லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம்!

ABOUT THE AUTHOR

...view details