சென்னை:சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மைலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளான தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஆகிய 7 பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சாலமன் மோகன்தாஸ் என்பவர் தலைமறைவாக உள்ளதால், இதுவரை அவர் கைது செய்யபடவில்லை. மற்றவர்கள் கைது செய்யபட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர். இந்நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை, நிதிநிறுவனம் மற்றும் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.பாபு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க:"வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த விளையாட்டு பொருட்கள்”