தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை வாலிபர் கொடூர கொலை.. கதறிய காதலி.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி! - nellai youth murder - NELLAI YOUTH MURDER

nellai murder cctv: நெல்லையில் காதலியுடன் ஹோட்டலுக்கு வந்த வாலிபரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொலை செய்யப்பட்ட தீபக் ராஜா
கொலை செய்யப்பட்ட தீபக் ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 7:08 PM IST

தீபக் ராஜா படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி (Credit - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தைச் சேர்ந்தவர் தீபக் ராஜா. இவர் இன்று பாளையங்கோட்டை அருகே கேடிசி நகர் உள்ள பிரபல ஹோட்டலில் தனது காதலியுடன் உணவருந்த சென்றபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், தீபக் ராஜா மீது ஏற்கனவே கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தீபக் ராஜாவுக்கு சாதி ரீதியான பல்வேறு பிரச்சனைகளில் தொடர்பு இருப்பதாகவும் எனவே சாதி மோதல் காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்: இந்நிலையில், தீபக் ராஜா கொலை செய்யப்படும்போது பதிவான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் மர்ம நபர்கள் தீபக் ராஜாவை ஹோட்டலுக்கு வெளியே சில அடி தூரத்தில் இருந்து கையில் அரிவாளுடன் கொலை வெறியோடு துரத்துகின்றனர். உயிருக்கு பயந்து ஓடிய தீபக் ராஜா அங்கிருந்த கார் ஒன்றில் மோதி ஓட்டல் வாசல் முன்பு நிலைதடுமாறி கீழே விழுகிறார்.

அவர் கீழே விழுந்த அடுத்த நொடியே அக்கும்பல் அரிவாளால் தீபக் ராஜாவின் முகத்தை குறிவைத்து சரமாரியாக வெட்டுகின்றனர். முதல் வெட்டிலேயே தீபக் ராஜா பேச்சு மூச்சை இழந்து விழுந்த நிலையில், தொடர்ந்து அந்த கும்பல் தீபக் ராஜாவை வெறி கொண்டு வெட்டும் காட்சி சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து அக்கும்பல் அருகில் இருந்த கார் ஒன்றில் ஏறி தப்பி ஓடியுள்ளது.

மேலும், தீபக் ராஜா வெட்டப்படுவதை பார்த்து ஹோட்டல் வாசலில் நின்றிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு உள்ளே ஓடுகின்றனர். குறிப்பாக பெண்களும் இச்சம்பவத்தை நேரில் பார்த்து மிரண்டு போய் ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

அதேபோல, தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட போது அவருடன் வந்த காதலி ஹோட்டல் உள்ளே இருந்துள்ளார். பின்னர் மக்கள் அலறியடித்து ஓடுவதை கண்டு வெளியே வந்து பார்த்தபோதுதான் தீபக்ராஜாவை மர்ம கும்பல் கொலை செய்தது தெரியவந்துள்ளது. அடுத்த நொடியே அந்த பெண் ஓடி சென்று தீபக் ராஜாவின் உடல் அருகில் நின்று கதறி அழுவது போன்ற காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பி ஓடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையில் சிறுவனை தாக்கிய குரங்கு.. அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க சிறப்பு படை அமைப்பு!

ABOUT THE AUTHOR

...view details