தேனி: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், மற்றொரு நபரிடம் கடன் பெற்ற நிலையில், அப்பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடன் பெற்றவரின் 19 வயது மகள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு 19 வயது இளம்பெண்ணை தேனியைச் சேர்ந்த நான்கு பேர் காரில் கடத்திச் சென்று, காரில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல், செல்போனில் அதனை படம் பிடித்ததாகவும், அதை வெளியில் தெரிவித்தால் வலைத்தளங்களில் போட்டு விடுவதாகவும் மிரட்டியதாக பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.