தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிந்தாதிரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி தொடங்க தடை கோரி வழக்கு! - CHINTADRIPET FISH MARKET

சென்னை சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியை தொடங்க தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2025, 10:35 PM IST

சென்னை:கூவம் நதியில் மீன் கழிவுகள் கொட்டப்பட வாய்ப்புள்ளதால், முறையான திடக்கழிவு மேலாண்மை வசதியை ஏற்படுத்தாமல், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்படும் நவீன மீன் அங்காடியை துவங்கக்கூடாது என உத்தரவிடக்கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், பசுமை பாதுகாப்பு என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் அதன் நிறுவனர் சையது கட்டுவா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இயங்கி வரும் மீன் அங்காடிக்கு பதிலாக புதிய நவீன மீன் அங்காடியை 2 கோடி 21 லட்சம் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

102 கடைகள் அமைக்க உள்ள இந்த அங்காடியில் திடக்கழிவு மேலாண்மையை முறையாக அமல்படுத்தாமல் தொடங்கக்கூடாது. 1,022 சதுர மீட்டர் பரப்பில் அமைய உள்ள நவீன மீன் அங்காடியில் திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு, வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், முறையான திடக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை.

இதையும் படிஙக:நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத மாநகராட்சி ஆணையர்.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

மீன் அங்காடியில் முறையான திடக்கழிவு மேலாண்மையும், கழிவு நீர் சுத்திகரிப்பு வசதியும் ஏற்படுத்தாவிட்டால் அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மீன் கழிவுகள் கூவம் நதியில் கொட்டப்பட வாய்ப்புள்ளதால், அதனால், கூவத்தை சீரமைக்கும் நடவடிக்கைகள் வீணாகும் என்பதால், முறையான திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்காமல் நவீன மீன் அங்காடியை துவங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்.

வீன மீன் அங்காடியில் முறையான வாகனம் நிறுத்தம், தூய்மை வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details