தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலையென உயர்ந்த ஏலக்காய் விலை.. மகிழ்ச்சியில் வியாபாரிகள்! - Cardamom price hike - CARDAMOM PRICE HIKE

Cardamom price increase: கடந்த வாரங்களில் படிப்படியாக உயர்ந்து வந்த ஏலக்காயின் விலை தற்போது ரூ.500 வரை உயர்ந்து, ஒரு கிலோ 3 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதால் போடிநாயக்கனூர் ஏலக்காய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Cardamom price sets new hike
Cardamom price sets new hike

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 3:22 PM IST

தேனி:ஏலக்காய் உற்பத்தி மற்றும் வர்த்தகங்களில் இந்திய அளவில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முதன்மை வகிக்கும் பகுதியாகத் திகழ்கின்றது. போடிநாயக்கனூர் அருகே உள்ள கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அளவில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய், போடிநாயக்கனூரில் உள்ள மத்திய அரசு நறுமணப் பொருட்கள் நிறுவனம் சார்பாகவும், தனியார் ஏல மையங்கள் சார்பாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், போடிநாயக்கனூர் ஏலக்காய் வர்த்தக மையங்களில் தற்போது ஏலக்காய் விலை கடும் உயர்வைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு வருடமாக ஒரு கிலோ ரூ.1,350 முதல் ரூ.1,550 வரை விற்கப்பட்ட ரகம் பிரிக்கப்படாத ஏலக்காய், தற்போது ரூ.500 வரை விலை உயர்ந்து, ரூ.1,850 முதல் ரூ.1,950 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:ரயில் பயணிகளுக்கு ரூ.20-க்கு சாப்பாடு - தெற்கு ரயில்வே அசத்தல் ஏற்பாடு!

ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்த முதல் ரக ஏலக்காய், தற்போது ரூ.500 வரை உயர்ந்து, ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. போதிய மழையில்லாத காரணத்தினால், ஏலக்காய் விளைச்சல் மிகவும் குறைந்து, அதனால் தான் தற்போது ஏலக்காயின் விலை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஏலக்காய் ஏற்றுமதி அதிகரித்ததன் கரணமாக, சிறிது சிறிதாக விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது ஏலக்காயின் விலை கடந்த ஒரே வாரத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.500 விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இது ஏலக்காய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு ரகம் பிரிக்கப்படாத ஏலக்காயின் விலை 2 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏலக்காய் வர்த்தகத்தின் சந்தை விலை நிர்ணயம் செய்யும் போடிநாயக்கனூர் பகுதியில், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏலக்காய் தொழிலை வைத்து வாழ்க்கை நடத்தி வரும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு இம்மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:சொட்டு சொட்டாய் ஊறும் கிணற்றுத் தண்ணீர்.. குடங்களோடு காத்திருக்கும் வத்தல்மலை மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details