மதுரை:தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் 50வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை ஓடைப்பட்டியில் 550 நபருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்லணை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு காசோலை, ஊர் பொதுமக்களுக்கு தையல் மிஷன், சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.