திருப்பூர் : திருப்பூர் நல்லூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. வார இறுதி விடுமுறை நாட்கள் முடிந்து வழக்கம்போல பள்ளி இன்று காலை துவங்கியுள்ளது. பள்ளி துவங்கிய சிறிது நேரத்தில் இ-மெயில் மூலம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
அந்த மெயிலில் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கக்கூடும் என தகவல் அளிக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக நல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையும் படிங்க :நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு!
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்தவந்த போலீசார் பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக பள்ளி மைதானத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தனர். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பள்ளி வகுப்பறைகள், அலுவலகங்கள், கழிவறைகள் மற்றும் பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்டவற்றை சோதனை மேற்கொண்டனர்.
பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அறிந்து பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களின் புத்தகப்பை மற்றும் மதிய உணவுப்பை உள்ளிட்டவைகளை அங்கேயே வைத்து விட்டு மாணவர்களை மட்டும் வெளியேற்றினர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டதில், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரிய வந்தது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்