சென்னை:2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், பிப்.12 ஆம் தேதி துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது நாள் அமர்வு இன்று (பிப்.14) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றைய பேரவையில் முதலில் வினா விடை நேரமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும், 'ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற இரண்டு தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
பார்வையற்ற பள்ளி மாணவர்கள்:சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கல்லூரி மற்றும் மற்றும் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பேரவை கூட்டம் நடைபெறும் நாட்களில், மாணவர்களைத் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் அழைத்து வருவது வழக்கம்.