தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக இளைஞரணி மாநாடு நமத்துப்போன மிக்சர் என அண்ணாமலை விமர்சனம் - en mann en makkal yatra

K Annamalai: திமுக இளைஞரணி மாநாடு நமுத்துப்போன மிச்சர், அதை யாரும் சாப்பிட முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

Annamalai
அண்ணாமலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 10:26 AM IST

"திமுக இளைஞரணி மாநாடு நமத்து போன மிக்சர் என திமுக இளைஞரணி மாநாடு குறித்து அண்ணாமலை விமர்சனம்

திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, "என் மண் என் மக்கள் (En Mann En Makkal) நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். மோடி பங்கேற்க வேண்டும் என்பது எங்களது விருப்பம் என தெரிவித்தார்.

மேலும், கே.பி முனுசாமி பேசுவது சரியா? கே.பி.முனுசாமிக்கு அண்ணாமலை மீது வன்மம், எம்ஜிஆர் அதிமுகவுக்கு உள்ளது போல, பாஜகவுக்கு மோடி தான். மற்ற தலைவர்கள் பலர் உருவாகலாம். ஆனால் தமிழ்நாட்டில் முதலமைச்சர் வேட்பாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் மோடி போல் உருவாக்க முடியாது. தற்போது 20 கோடி தொண்டர்களை தாண்டி விட்டோம்.

தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் தான் இருக்க வேண்டும். திமுக, அதிமுக இரண்டும் பங்காளிகள். நூற்றுக்கு 4 மார்க்கும், 5 மார்க்கும் எடுத்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நூற்றுக்கு நூறு எடுத்த மோடி எங்கே இருக்கிறார் என்பதை அவர்கள் அறியவில்லை. பாஜக மீது உள்ள எதிர்ப்பை விட அண்ணாமலை மீதான வன்மத்தை நான் ரசிக்கிறேன்.

என்டிஏவை உருவாக்கியது பாஜக தான், அதிமுக இல்லை அது தண்ணியைப் போல் நீரோட்டமாக உள்ள கூட்டணி. என்டிஏ கூட்டணியில் தற்போது கதவு, ஐன்னல் திறந்துள்ளது. மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்பவர்கள் தாராளமாக இணையலாம். திமுக இளைஞர் மாநாட்டை பொருத்தவரை குடும்பத்திற்காக குடும்பத்தினர் நடத்திய மாநாடு. மாநாட்டில் இயற்றிய தீர்மானத்தில் ஒன்றுக்கு கூட தகுதி இல்லை.

திமுக தொண்டர்கள் நீட்டுக்கு எதிரான கையெழுத்திட்ட அஞ்சல் அட்டையை கூட சேலம் மாநாட்டில் தூக்கி எறிந்துவிட்டு சென்று விட்டார்கள். தமிழ்நாட்டை திமுகவிடமிருந்தும், திமுக குடும்பத்தினரின் அராஜகம் மற்றும் அடாவடியிடம் இருந்து மீட்பது தான் பாஜகவின் கொள்கை. சிறுமியை துன்புறுத்திய திமுக எம்எல்ஏ குடும்பத்தினரை ஏன் இதுவரையிலும் கைது செய்யவில்லை. இது போன்று தான் கடலூர் எம்பி ரமேஷ் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை, சமூக நீதியை பற்றி பேச திமுகவுக்கு லாயக்கு இல்லை.

ஒற்றைக் கட்சி ஆட்சிக்கு இருக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். ஆனால் ஒற்றை குடும்பம் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் மக்கள் விருப்பம். இளைஞர் அணி மாநாடு என்பது நமத்துப்போன மிச்சர் அதை யாரும் சாப்பிடமுடியாது. குப்பைக் கூடைகள் நிரம்பியது தான் திமுக இளைஞரணி மாநாட்டின் சாதனை. தமிழ்நாட்டில் திமுகவின் ஊழல் பற்றி தமிழக பத்திரிக்கையாளர்கள் ஏன் 31 மாதமாக பேசவில்லை?. எங்களது எதிரி திமுக தான், எங்கள் இரண்டு பேருக்கும் மட்டும் தான் போட்டி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மாநிலத்தில் ஆளும் திமுகவுக்கும் தான். தனி மனிதனாக அரசியல் கோட்பாட்டுக்கு உட்பட்ட நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

திமுக 2ஜி பைல்ஸ் போய்க்கொண்டுள்ளது. இரண்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது, ஒன்பதும் வெளியிட்ட பின்னர் திமுக பைல்ஸ் குறித்து பேசுவேன். பிஞ்சு போன உதிரிகள் எல்லாம் சேர்ந்து இந்தியா கூட்டணியாக வந்தார்கள். அதனால் நாட்டில் முடிவு எடுக்க முடியாது. அது அபாயம் அதை தடுக்க தான் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க தொடங்கி உள்ளார்கள்.

திருச்சி மீது பாசம் என்பதால் தான் மோடி இரண்டு முறை வந்துள்ளார். குமாரமங்கலம் திருச்சியில் இருந்த போது நம்பிக்கை இருந்த திருச்சியை மறுபடியும் தமிழ்நாட்டின் முக்கிய நகராக மாற்ற வேண்டும். ஸ்ரீரங்கத்தில் நடந்த கம்பராமாயண நிகழ்வு என்பது உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் என பிரதமர் கூறியுள்ளார். ஆகவே திருச்சி பிரதமர் இதயத்தில் உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் மோசமாக திமுக சரித்திரத்தில் தோற்றுள்ளார். 2014இல் ஜீரோ பல எம்பி தேர்தலில் பூஜ்ஜியம் பெற்றுள்ளனர். வாக்கு சதவீதம் 20% ஆக இருந்தது முதலமைச்சர் தற்போது பலவீனம் அடைந்து விட்டார், மனதளவில் பாஜக ஜெயிக்க ஆரம்பித்து விட்டது என எண்ண தொடங்கிவிட்டார். நான் தாடி வளர்ப்பது சாமிக்கு ஒரு நேர்த்திக்கடன் உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகளை கைது செய்யாதது ஏன்? அண்ணாமலை ஆவேசம்..!

ABOUT THE AUTHOR

...view details