தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக சட்டப்பேரவையை புறக்கணித்த பாஜக, பாமக எம்எல்ஏக்கள்- காரணம் என்ன? - TN ASSEMBLY SESSION 2025

இன்று துவங்கிய சட்டப்பேரவையில், அண்ணா பல்கலை விவகாரத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறி பாஜக மற்றும் பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த நயினார் நாகேந்திரன்,  ஜி.கே மணி பேட்டி
வெளிநடப்பு செய்த நயினார் நாகேந்திரன், ஜி.கே மணி பேட்டி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 11:18 AM IST

Updated : Jan 6, 2025, 11:36 AM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டம் இன்று (ஜனவரி 6) காலை 9.30 மணிக்கு துவங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி தனது உரையுடன் கூட்டத்தைத் துவக்கி வைக்க இருந்தார். ஆனால், சட்டப்பேரவை துவங்கிய சில நிமிடங்களிலேயே ஆளுநர் வெளியேறினார். அதற்கு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னர் தேசிய கீதம் பாடப்படாததால் வெளியேறியதாக ராஜ்பவன் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பாமக எம்.எல்.ஏ ஜி.கே மணி, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

போராடினால் வழக்குப் பதிவு?:

இந்நிலையில், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "புத்தாண்டில் ஆளுநர் உரையோடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருந்தது. இதில், பாட்டாளி மக்கள் கட்சி வெளிநடப்பு செய்திருக்கிறோம். காரணம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமையைக் கண்டித்து அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதை கண்டித்து அரசியல் கட்சிகள் ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு உரிமை இருக்கிறது.

ஆனால், இதற்கு அனுமதி அரசு வழங்க மறுக்கிறது. பேசுவதற்கும் வாய்ப்பு அளிக்கவில்லை, போராடுவதற்கும் அனுமதி இல்லை. இப்படி அனுமதி மறுக்கப்பட்டுப் போராடியவர்களை கைது செய்து வழக்குப் பதிவு செய்து மண்டபத்தில் பிடித்து வைக்கின்ற கொடிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதனால் பாமக சார்பில் வன்மையாகக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, எந்த அமைப்பாக இருந்தாலும் சரி ஜனநாயகத்தில் போராடுவதற்கு உரிமை இருக்கிறது. அதுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுவுடைமை கட்சிகள் கூட அவற்றை சொல்கின்றனர். அதை திமுக கூட்டணிக் கட்சியில் இருக்க கூடியவர்களே சொல்கிறார்கள்" என்றார்.

தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை:

பின்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தலைமைச் செயலகம் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் கொடூரத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி வெளிநடப்பு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இரவு நேரத்தில் இந்த குற்றம் நடந்துள்ளது. அந்த குற்றவாளி ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்.

இதையும் படிங்க:ஒரு மில்லியன் டாலர் பரிசு - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

அந்த குற்றவாளி மீது ஏற்கனவே 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கக்கூடிய சூழலில் அவர் மீது நடவடிக்கை இன்னும் எடுக்கவில்லை என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. காவல்துறை ஆணையர் மொபைல் போனை ஏரோபிளேன் மோடில் போட்டிருக்கிறார் என்று கூறுகிறார். தமிழக அரசு இதை கண்டு கொள்ளவும் இல்லை, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

சட்ட ஒழுங்கு சரியில்லை:

அண்ணா பல்கலைக்கழகம் விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா? இதனைத் திட்டமிட்டு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமையாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கேட்கக்கூடிய ஒரே கேள்வி யார் அந்த சார்? என்ற கேள்விதான். இந்த வார்த்தையை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கலாம் போல.

எனவே, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை யார் நடத்துகிறார்கள்? அரசாங்கம் தான் அனைத்திற்கும் காரணம். சட்டம் ஒழுங்கு சரியில்லை. சிசிடிவி அங்கு இயங்கவில்லை அதற்கு யார் காரணம்? காவல்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா.

மேலும், சட்டப்பேரவைக்குள் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த உடனே தேசிய கீதம் படிக்க வேண்டும். தேசிய கீதம் படிப்பதற்கு முன்பே சட்ட விதிகளைப் பின்பற்றாமல், ஆளுநரை முற்றுகையிட்டு உரையைப் படிக்க விடாமல் செய்ததால், உடனே அவர் கிளம்பிவிட்டார். தற்போது ஆளுநரின் உரையை சபாநாயகர் படித்துக் கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

Last Updated : Jan 6, 2025, 11:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details