புதுடெல்லி: இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நமது தேசம் முழுமைக்கும் எண்ணற்ற மைல்கற்களுடன் தமிழ்நாட்டின் பங்களிப்பும் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் தொல்லியல் துறை சார்பில் 'இரும்பின் தொன்மை' நூலினை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"தமிழர் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நான் அறிவிக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வுப் பிரகடனத்தை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக - இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல உலகுக்கே நான் அறிவிக்கிறேன். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.
With immense pride and unmatched satisfaction, I have declared to the world:
— M.K.Stalin (@mkstalin) January 23, 2025
“The Iron Age began on Tamil soil!”
Based on results from world-renowned institutions, the use of iron in Tamil Nadu dates back to the beginning of 4th millennium B.C.E., establishing that iron usage… pic.twitter.com/YYslKX7K5F
தற்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலம் அண்மையில் கிடைக்கப் பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000 ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பு அறிமுகமாயிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறலாம்",என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழர் நிலப்பரப்பில் இரும்பின் காலம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
India’s rich heritage continues to inspire the world. Recent archaeological findings in Tamil Nadu reveal the use of iron over 5,300 years ago, showcasing India’s early advancements in the Iron Age.
— Rahul Gandhi (@RahulGandhi) January 23, 2025
Tamil Nadu’s contributions, along with countless milestones across our nation,… https://t.co/TJLPABHK4o
இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவில் மறுபகிர்வு செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசத்தின் எண்ணற்ற மைல்கற்களில் தமிழ்நாட்டின் பங்களிப்பும் உள்ளது என்று கூறியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "இந்தியாவின் உயர்ந்த பாரம்பரியம் தொடர்ந்து உலகினை ஈர்த்து வருகிறது. 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டதாக தமிழ்நாட்டில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் அண்மையில் தெரிய வந்துள்ளது. இந்தியா பண்டைய காலத்திலேயே மேம்பட்டு இருந்ததை இரும்பு காலம் வெளிப்படுத்துகிறது.
இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நமது தேசம் முழுமைக்கும் எண்ணற்ற மைல்கற்களுடன் தமிழ்நாட்டின் பங்களிப்பும் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், சமூகத்திலும், குரலிலும் செழித்து வளரும் இந்தியாவின் உணர்வைக் கொண்டாடுவோம்,"என்று கூறியுள்ளார்.