ETV Bharat / state

உசிலம்பட்டி அருகே அருகே விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி! - ACCIDENT

உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி நகர் காவல்நிலையம்
உசிலம்பட்டி நகர் காவல்நிலையம் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2025, 3:36 PM IST

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புதுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் - விஜயலட்சுமி தம்பதி. விவசாயக் கூலி தொழிலாளியான பாலமுருகன், வைக்கோல் வியாபாரமும் செய்து வந்தார். வைக்கோல் வியாபாரத்திற்காக சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் எதிரே உள்ள கடைக்கு தம்பதி இருவரும் சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்ற இந்த தம்பதி மீது உசிலம்பட்டியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலமுருகன் படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் விஜயலட்சுமி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு அருகில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.