தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி, சத்தியமங்கலம் வனச் சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்..

Bird Census: தமிழ்நாட்டின் பல்வேறு வனப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நீலகிரி, சத்தியமங்கலம் வனப்பகுதிகளிலும் வனத்துறையினர் பறவைகள் கணக்கெடுப்பு பணியைத் தொடங்கி உள்ளனர்.

Nilgiri
நீலகிரி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 3:34 PM IST

நீலகிரி: தமிழ்நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நீலகிரி வனக்கோட்டம், கூடலூர் வனக்கோட்டம், முதுமலை புலிகள் காப்பகம் என மாவட்டம் முழுவதும் உள்ள வனப்பகுதிகள், சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளில் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில் வன ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் கீழ் கோத்தகிரி, குன்னூர், பர்லியார் பள்ளத்தாக்குகளில் அரிய வகைப் பறவைகளான இருவாச்சி பறவைகள் தென்பட்டது.

குறிப்பாக இந்த கணக்கெடுப்பு பணிகளில் பறவைகளை நேரடியாகப் பதிவு செய்வது, அதன் கூடுகள், அதற்குத் தேவையான பழ வகைகள் உள்ளனவா என்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

இதேபோல் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தமிழக வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நேற்று (மார்ச்.02) தொடங்கியது.

இந்த 10 வனச்சரகங்களுக்கு உள்பட்ட பகுதியில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 50க்கும் மேற்பட்ட பறவையாளர்கள், வன ஆர்வலர்கள், வனவர்கள், வனக்காவலர்கள் ஆகியோரைக் கொண்ட தனிக்குழுவினர் நிலவாழ் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக டி.என்.பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட கடம்பூர், விளாங்கோம்பை, பங்களாபுதூர் மற்றும் கணக்கம்பாளையம் உள்ளிட்ட வனப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு கணக்கெடுப்பு பகுதிக்கும் இரண்டு பறவைகள் தன்னார்வலர்கள் வனப் பணியாளர்களுடன் கலந்து கொண்டு இந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:சென்னை- குவைத் இடையே கூடுதல் விமானச் சேவைகள்.. இன்று முதல் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details