தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சவுக்கு சங்கர் சென்னையிலேயே ஜாமீன் கையெழுத்திடலாம்.. உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு! - SAVUKKU SHANKAR BAIL

சவுக்கு சங்கர் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் குற்றப்பிரிவு சார்ந்த வழக்குகள் என்பதால், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் ஆஜராகி நிபந்தனைகளை பின்பற்றி ஜாமீன் கையெழுத்திட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப்படம்
சவுக்கு சங்கர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2024, 6:38 PM IST

மதுரை :யூடியூபர்சவுக்கு சங்கர்உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "பெண் காவலர்களுக்கு எதிராக பேசியதாக என் மீது கோவை, சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் கஞ்சா வைத்திருந்ததாகவும் என் மீது தேனியில் கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

என்னை குண்டர் சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தது. குண்டர் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில் என் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும், பெண் காவலர்களுக்கு எதிராக பேசிய வழக்கில் உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் விடுவித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கையெழுத்து இடவேண்டும் என்று கீழமை நீதிமன்றம் நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தற்போது நான் சென்னையில் வசித்து வருவதால், அனைத்து வழக்குகளிலும் ஒரே காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து இடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என அதில் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க :ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.. ஐகோர்ட் உத்தரவு!

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் மீது 16 வழக்குகள் உள்ளன. அதில் சில வழக்குகளில், தினமும், வாரமும், மாதமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனைகள் உள்ளது என தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதி, சவுக்கு சங்கர் மீது உள்ள வழக்குகளில் பெரும்பான்மையானவை குற்றப்பிரிவு காவல் துறையினரால் பதியப்பட்ட வழக்குகள். எனவே, அனைத்து வழக்குகளிலும் சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராகி அந்தந்த வழக்குகளில் உள்ள நிபந்தனைகளை பின்பற்றி கையெழுத்திட வேண்டும். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றங்களில் சரியான முறையில் ஆஜராகி வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்" என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details