தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரந்தை ஆரம்ப சுகாதராநிலையத்தில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்ட கர்ப்பிணிக்கு நேற்று (புதன்கிழமை) மருத்துவமனை நிர்வாகம் சார்பாக வளைகாப்பு விழா நடைபெற்றது. அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் '100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்' என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமந்த்குமார், பூனம் (23) தம்பதியினர், தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரந்தை கொடிக்காலூரில் இயங்கி வரும் தனியார் அரிசி ஆலையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
கரந்தை அருகே உள்ள சுங்கடத்தில் பகுதியில் வசித்து வரும் இவர் நிறை மாத கர்ப்பிணி என்பதால், இவருக்கு கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மார்ச் 3 ஆம் தேதி சென்றுள்ளார். அவருக்கு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கணித்திருந்தனர்.
இந்நிலையில் அவருக்கு பரிசோதனை செய்ததில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 8.1 என்ற அளவில் இருந்ததால் பூனத்திற்கு இரத்தம், கர்ப்பகால இரத்த சோகை இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக அரசு இராசா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
கடந்த மார்ச் 10ஆம் தேதி அனுதிமதிக்கபட்ட அவருக்கு 1 யூனிட் ' ஓ ' இரத்த வகை இரத்தம் செலுத்தப்பட்டு, 4 தவணை அயர்ன் சுக்ரோஸ் ஊசி செலுத்தப்பட்டது. இதில் அவருக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 10.6 என்ற அளவில் உயர்ந்திருந்ததால் மார்ச் 24ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.