தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்.. கொலையா? தற்கொலையா? என விசாரணை.. - auto driver mysterious death - AUTO DRIVER MYSTERIOUS DEATH

Auto Driver Recovered Dead Body In Pond: ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், நங்கநல்லூர் கோயில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழவந்தாங்கல் காவல் நிலையம்
பழவந்தாங்கல் காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 1:23 PM IST

சென்னை: சென்னை நங்கநல்லூர் 4வது பிரதான சாலையில் உள்ள கோயில் குளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக நடைபயிற்சிக்கு வந்தவர்கள் பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பழவந்தாங்கல் போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் இந்த விசாரணையில், சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (48) எனவும், இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்ததும், இவரது மனைவி வனிதா (38) இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த இரண்டு நாட்களாக நந்தகுமார் குடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 27) காலை வழக்கம் போல ஆட்டோ ஓட்டச் சென்ற நந்தகுமார், இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் கணவரைக் காணவில்லை என மனைவி வனிதா பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமாரை போலீசார் தேடியுள்ளனர். இந்த நிலையில், இன்று (ஜூன் 28) காலை நங்கநல்லூர் கோயில் குளத்தில் நந்தகுமார் சடலமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, நந்தகுமாரின் உடலை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நாகராஜன் குளத்தில் தவறி விழுந்து உயிர் இழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை யாராவது கொலை செய்து கோயில் குளத்தில் வீசிச்சென்றுள்ளனரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:“சிபிஐ விசாரணையையும் நம்ப முடியாது..” கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் எவிடன்ஸ் கதிர் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details