ராணிப்பேட்டை: தமிழகத்தில் 'என் மண் என் மக்கள்' நடைப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (பிப்.7) ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 'நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை விமர்சனம் செய்த திமுகவின் மூத்த உறுப்பினர் டி.ஆர்.பாலு, அவரை 'தகுதி அற்ற அமைச்சர்' எனக் கூறியது மிகவும் கண்டனத்திற்குரிய பேச்சு. இதற்காக டி.ஆர்.பாலு பொது இடத்தில் அமைச்சர் எல்.முருகனிடம் பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
டி.ஆர்.பாலு, எல்.முருகனை மட்டும் தவறாக பேசவில்லை. ஒட்டுமொத்த பட்டியலின மக்களையும் இழிவாக பேசியுள்ளார். தகுதியான அமைச்சருக்கான விளக்கம் என என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். எனவே, டி.ஆர்.பாலு இதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை தமிழகத்தில் எங்கு சென்றாலும் கருப்பு கொடி காட்ட திட்டமிட்டுள்ளோம்' எனத் தெரிவித்தார்.
இதனிடையே அமைச்சர் ஆர்.காந்தி குறித்து பேசிய அண்ணாமலை, "எம்.எல்.ஏ.காந்திக்கு 10% அமைச்சர் என்று வேறு பெயர் உண்டு. அவ்வப்போது புதிதாக ஊழலில் ஈடுபடுவார். பொங்கலுக்கு திமுக அரசு கொடுத்த வேட்டிகளில் 100% பருத்தி இருக்க வேண்டும்; ஆனால், அதை தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தில் (The South India Textile Research Association - SITRA)) ஆய்வுக்கு உட்படுத்திய போது, அதில் 78 சதவீதம் பாலிஸ்டர் மற்றும் 22 சதவீதம் பருத்தி அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.