தமிழ்நாடு

tamil nadu

"வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு தவறான தகவல்" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்! - Vanniyars reservation Issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 2:10 PM IST

Updated : Aug 4, 2024, 2:28 PM IST

Anbumani Ramadoss condemned M.K.Stalin: வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு PRO-க்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். முன்னதாக, துலாபாரத்தில் எடைக்கு எடை அரிசியை தானமாக கொடுக்கும் நிகழ்வு நடந்தது. அதில், 780 கிலோ அரிசி தானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, திருச்செந்தூர் வள்ளி குகை பின்புறம் உள்ள பகுதியில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினர்.

அன்புமணி ராமதாஸ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், "வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு பிஆர்ஓக்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது. தவறான தகவல் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து கொள்கிறேன். மேலும், இதேபோல தமிழக அரசு தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அடுத்த 18 மாதத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. அதில் நாங்கள் யார் எனக் காண்பிக்கக்கூடிய காலம் வரும் என்றார்.

அதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் தென் மாவட்டங்களில் பெய்த பெருவெள்ளத்தைச் சமாளிக்க மத்திய அரசு போதிய நிதி வழங்காதது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, மத்திய அரசு இதுபோன்ற காலங்களில் கண்டிப்பாக உதவி செய்யத்தான் வேண்டும். ஆனால், மாநில அரசு கடந்த பட்ஜெட் நிதியாண்டில் ரூ.18 லட்சம் கோடி தாக்கல் செய்தது. அதில், ஒரு ரூ.2 ஆயிரம் கோடியை பேரிடர் காலத்தில் பயன்படுத்த வேண்டிய தொகைக்காக ஒதுக்கினால் தமிழக அரசே இதனைச் சமாளிக்கலாம்.

கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் உரிய கால அவகாசம் வழங்கி தேர்தல் தேதி உள்ளிட்டவற்றை அறிவிக்க வேண்டும். அதில் முறையாக அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: “அது திரிக்கப்பட்ட தரவு தான்”.. 10.5% இடஒதுக்கீடு RTI விவரத்திற்கு ராமதாஸ் கண்டனம்!

Last Updated : Aug 4, 2024, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details