தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரு முதலாளிகளுக்கு வேண்டாம்; ஏழை மக்களுக்கான கண்டுபிடிப்புகள் வேண்டும் - அன்பில் மகேஸ் உருக்கம்

மாணவர்கள் கண்டுபிடிப்புகளுக்கான முயற்சியை பெற்றோர்கள் யாரும் தடுக்க வேண்டாம் எனவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு என்றில்லாமல், பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.

அறிவியல் கண்காட்சியைப் பார்வையிடும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அறிவியல் கண்காட்சியைப் பார்வையிடும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 12 hours ago

சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஆர்வமுடன் கேட்டறிந்தார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்கள் வீட்டில் ஆர்வத்துடன் உருவாக்கும் புதிய கண்டுபிடிப்புக்கான முயற்சியை பெற்றோர்கள் யாரும் தடுக்க வேண்டாம். கண்டுபிடிப்புகள் வாயிலாக சமூகத்திற்கு என்ன கிடைக்கும் என மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்ல, பங்குபெற வேண்டுமென நினைக்கும்போதே மாணவர்களாகிய நீங்கள் வென்றுவிட்டீர்கள் என்று உத்வேகப்படுத்திப் பேசினார்.

உங்கள் மீதுள்ள நம்பிக்கையில் நாங்கள்!

மாணவர்களுக்கு சான்றுகளை வழங்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (ETV Bharat Tamil Nadu)

மேலும், பெரு நிறுவனங்கள் (Corporate companies), பெரிய திட்டங்கள் என்றில்லாமல், பொது ஜனம், கூலித்தொழிலாளி, கடை நிலை பொதுமக்களுக்கு சென்றடையும் படியாக மாணவர்களின் கண்டுபிடிப்புகள் திட்டங்கள் இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக அமைச்சர் கூறினார். நல்ல எதிர்காலத்தை நீங்கள் அமைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள்; எங்களைப் போன்றோர் இந்த மேடைகளில் அமர்ந்திருக்கிறோம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

முதலீடுகள் உங்களை நம்பி தான் வருகிறது!

அறிவியல் கண்காட்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (ETV Bharat Tamil Nadu)

"வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆயுதம் இருக்கிறது, வலுவான ராணுவம் இருக்கிறது என்றெல்லாம் பார்த்து முதலீடு செய்வதற்கு வருவதில்லை. நல்ல மனித வளத்தை சார்ந்து தான், உங்களை நம்பி தான் வருகின்றனர். படிப்பு முக்கியம் தான். அதே நேரத்தில் உங்கள் தனித்திறனான யோசனைகள் மிக முக்கியம். யோசித்துக்கொண்டே இருங்கள்," என்றார் அன்பில் மகேஸ்.

இதையும் படிங்க
  1. 19 ஆயிரம் புதிய ஆசிரியர்களை கொண்டு வர முடிவு... அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!
  2. "பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" - அமைச்சர் உறுதி!
  3. உலக புகழ் பெற்ற பிரான்ஸ் தேசிய நூலகத்தை பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தில் நீங்கள் கற்றுக் கொண்டதை இந்த சமூகத்திற்கு எப்படி திருப்பிக் கொடுக்கலாம் என்பதை நினைத்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், இந்த மாதிரியான நிகழ்ச்சி வாயிலாக உங்கள் கண்டுபிடிப்புகளை மக்களிடத்தில் கொண்டு சேருங்கள் இதை பார்க்கும் போது கிராமத்தில் இருக்கின்ற ஒரு குழந்தைக்கு அடுத்த ஆண்டு இந்த இடத்திற்கு வரவேண்டும் என எண்ணம் தோன்ற வேண்டும் எனப் பேசி தனது உரையை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முடித்து கொண்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் QR குறியீடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details