சேலம்:காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் 34வது பொது மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம், சேலம் ஐந்து சாலை சந்திப்பு அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டிற்கு மத்திய அரசு சார்பில் விதிக்கப்படும் ஜிஎஸ்டியால் பொதுமக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. இதனால் மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் அவற்றின் வளர்ச்சியில் தடை ஏற்படும். எனவே, தங்களின் பல ஆண்டுகால கோரிக்கையை ஏற்று ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டிற்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தென்மண்டல இன்சூரன்ஸ் கூட்டமைப்பு இணைச் செயலாளர் ரமேஷ் குமார் கூறுகையில், “மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நான்கு காப்பீட்டு நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும். மூன்றாம் மற்றும் நான்காம் நிலையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.