சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சார்பில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க தூத்துக்குடி எம்.பி கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, தற்போது அதிமுக, தனது நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுக்கள் குறித்த பெயர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு வெளியிட்டுள்ளது.
இதன்படி, அதிமுகவின் தேர்தல் அறிக்கையினை தயாரிக்கும் பணியில் முன்னால் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி வி.ஜெயராமன், சி.வி.சண்முகம், செ.செம்மலை, பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல், தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பா.பென்ஜமின் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.தம்பிதுரை, கே.ஏ.செங்கோட்டையன், என்.தளவாய்சுந்தரம், செல்லூர் கே.ராஜு, கே.பி.அன்பழகன், காமராஜ், கோகுல இந்திரா, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சிவபதி, சட்டமன்றப் பேரவை முன்னாள் தலைவர் ப.தனபால் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், தேர்தல் சம்பந்தமான விளம்பரப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் விளம்பரக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திரபாலாஜி, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அப்துல் ரஹீம், ராஜலெட்சுமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேணுகோபால், V.P.B.பரமசிவம், இன்பதுரை, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: “வயித்திலே அடிப்பது”.. அயோத்தி நேரலை எல்இடி திரை அகற்றம் - நிர்மலா சீதாராமன் காட்டம்!