சென்னை: சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி 2012ல் லோக் சத்தா கட்சி மாநிலத் தலைவர் ஜெகதீஸ்வரன், 2015ல் தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த், 2023ல் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் P.S.ராமன் ஆஜராகி, மற்ற மாநிலங்களில் என்ன மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்கிற தகவல்களைச் சேகரித்து வருவதாகவும், 7 மாநிலங்கள் தகவல்களை வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், மீதமுள்ள மாநிலங்களிடம் இருந்து விளக்கங்களைப் பெற்ற பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என விளக்கம் அளித்தார்.