தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீட்' தேர்வு ஏன் விலக்கப்பட வேண்டும்? - நடிகை ரோகிணி அளித்த உருக்கமான விளக்கம் - ACTRESS ROHINI ON NEET - ACTRESS ROHINI ON NEET

Actress Rohini talk about NEET Exam: நீட் தேர்வு தொடர்பாக குழந்தைகள் மீது அழுத்தத்தை வைக்க கூடாது என முதன் முதலில் கூறியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தான் எனவும், சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.

நடிகை ரோகிணி
நடிகை ரோகிணி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2024, 1:11 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலூகா ஆக்கூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆக்கூர் கிளை சார்பில், பொன்விழா ஆண்டு கலை இலக்கிய நிகழ்ச்சிகளுடன் நேற்று இரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த சங்கத்தின் கிளைத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு முற்போக்கு சங்கத்தின் எழுத்தாளர் கலைஞர்கள் மாநில துணைத் தலைவரும், நடிகையுமான ரோகிணி கலந்து கொண்டார்.

நடிகை ரோகிணி மேடை பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து, ஆக்கூர் பகுதியில் பல்வேறு துறைகளில் சாதித்த மாணவிகள் மற்றும் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கும் பரிசுப் பொருட்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள், எழுத்தாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய நடிகை ரோகிணி, "தற்போது கல்வி என்பது எல்லோருக்கமானதாக என்றால் இல்லை. கோச்சிங் சென்டருக்கு அனுப்ப முடிந்த குழந்தைகளுக்கு மட்டுமே மருத்துவம் என்கிற நிலைமையில் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், அதுபோன்று நடக்கக் கூடாது. நீட் என்னும் ஒரு அழுத்தத்தை நாம் குழந்தைகள் மீது வைக்கக் கூடாது என்பதை முதல் முதலாகக் கூறியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தான். தற்போது, தமிழ்நாடு முதலமைச்சரும் நீட் விலக்கு குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்.

நீட் ஏன் விலக்கப்பட வேண்டும்? உதாரணமாக, ஒரு ஓட்டப்பந்தயத்தில் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்திருக்கக் கூடிய குழந்தைகள், கோச்சிங் சென்டருக்குப் போகும் குழந்தைகளுடன், காலில் ஷூ எதுவும் போடாமல் ஓடுவது போல், அதுவும் காலில் கணத்தைக் கட்டிக்கொண்டு ஓடுவது போல. இது எந்தவிதத்தில் நியாயமானது.

எல்லா குழந்தைகளுக்கும் எப்படியான வாய்ப்புகள் இருக்கின்றதோ, அதன்படிதான் அனைத்துமே இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தது என்றால், தமிழ்நாட்டில் தற்போது எத்தனையோ மருத்துவர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் பின் தங்கிய சமூகத்தில் இருந்து இருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் அங்கு செல்வதற்கான வாய்ப்பு, வழிமுறை எப்படி கிடைத்தது என்றால் சமூக நீதி இருந்ததனால் மட்டும் தான். அந்த சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்" என உருக்கமாகப் பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “விஜய் எங்கள் சமுதாயம்”.. விஜய்க்கு முதல் ஆதரவு தெரிவித்த அமைப்பு.. வெ.மு.க கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details