ஹைத்ராபாத்: மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவ் (87), உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது X வலைத்தளப் பதிவில், "இந்திய ஊடகம் மற்றும் சினிமாத் துறையின் தலைவரும், ஈ-நாடு குழுமத்தின் தலைவருமான ராமோஜி ராவ் அவர்களின் மறைவுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறேன். ராமோஜி ஃபிலிம் சிட்டி ராமோஜி ராவ் அவர்களின் கையால் உருவாக்கப்பட்ட கைவினைப்பொருளின் நினைவாக இருக்கும்.