சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 36 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின் வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் நலன் கருதி வேலைநிறுத்தப் போரட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பொது நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களது சுயநலத்திற்காக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மின் வாரியம் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விழாக் காலங்கள் நெருங்கி வரும் நிலையில், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், பி.பி பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன், "தாங்கள் அறிவித்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், தமிழக முழுவதும் மின் பகிர்மானக் கழகத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகக் குறிப்பிட்டார்.