ஈரோடு/ திருநெல்வேலி:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பூமாலை என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2009ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார்
அதைத் தொடர்ந்து, ஈரோடு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றிய போது ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை அவரது மனைவி கண்டித்து வந்துள்ளார், ஆனால் அவர் ஆன்லைன் சூதாட்டத்தை கைவிட மறுக்கவே, மனமுடைந்த அவரது மனைவி, குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பான புகார் எழுந்த நிலையில், பூமலை அந்தியூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அந்தியூரில் பணியாற்றிய போது, கடைகளில் தீபாவளி நேரத்தில் மாமூல் வசூல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்த சிசிடிவி ஆதாரங்களுடன் கடை உரிமையாளர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, பூமாலை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நம்பியூர் காவல் நிலையத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பூமாலை தொடர் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு வந்தது உறுதியாகி உள்ளது.